அபுதாபியில் லாரி ஓட்டுநர்களுக்கு நுழைய பிப்ரவரி-1 முதல் புதிய விதிமுறை அறிவிப்பு;மீறுபவர்கள் அபராதம் மற்றும் பிற தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
அபுதாபியில் லாரி ஓட்டுநர்களுக்கு நுழைய பிப்ரவரி-1 முதல் புதிய விதிமுறை அறிவிப்பு
அபுதாபியில் நுழையும் லாரி ஓட்டுநர்களுக்கு பிப்ரவரி-1 முதல் புதிய பயண விசதிகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதன்படி அனைத்து ஓட்டுநர்களும் எதிர்மறையான கோவிட் பி.சி.ஆர் பரிசோதனை முடிவை நாட்டில் நுழைய சமர்ப்பிக்க வேண்டும். அபுதாபியில் நுழைவதற்கு ஏழு நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவை லாரி ஓட்டுநர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கோவிட் தடுப்பூசி எடுத்த லாரி ஓட்டுநர்களுக்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை இலவச கோவிட் பி.சி.ஆர் சோதனை வழங்கப்படும் என்று அபுதாபி அரசின் அதிகாரப்பூர்வ ஊடகத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு,அமீரகத்தில் அதிகளவில் கோவிட் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய விதிமுறைகளை செயல்படுத்துகிறது. கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் அபராதம் மற்றும் பிற தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.