இந்தியாவிலும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் சேர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அபுதாபியின் முதல் பாரம்பரிய இந்து கோவிலுக்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்.மேலும் தலைநகரான Abu Mureikha-யில் இந்த கோவிலுக்கான வேலைகளை நூற்றுக்கணக்கான கட்டுமான ஊழியர்கள் சேர்ந்து செய்து வருகின்றனர். 450 மில்லியன் திர்ஹம் (122.5 மில்லியன் டாலர்) மதிப்பில் இது கட்டப்படுகிறது.ராஜஸ்தானில் சுமார் 2,000 சிற்பிகள் தெய்வங்களின் உருவங்களை மணற்கல் மற்றும் பளிங்குகளில் செதுக்க உளி மற்றும் சுத்தியலைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
தன்னார்வலரான பிரணவ் தேசாய் தி-நேஷன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இந்து பாரம்பரியத்தை புரிந்து கொள்ள உதவுவதற்காக உலகெங்கிலும் உள்ள அனைத்து மத மக்களையும் இந்த கோயில் வரவேற்கும், அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து சமூகங்களிடையேயும் சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்புகளைக் கொண்டு இது கட்டப்பட்டு வருகின்றன எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள், கோயில் வடிவம் பெறத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.இதன் வெளிப்புறத்தில் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்படும் இளஞ்சிவப்பு மணற்கல் இருக்கும், மேலும் உட்புறங்கள் வெள்ளை இத்தாலிய பளிங்கில் பதிக்கப்படும். கோயிலும் மற்றும் பார்வையாளர் வந்துச் செல்லும் பகுதியும் 2023 க்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்
55,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பரந்த வளாகத்தில், ஒரு பெரிய ஆம்பிதியேட்டர், கேலரி, நூலகம், உணவகம், பள்ளிவாசல் மற்றும் 5,000 மக்கள் அமரும் வகையில் இரண்டு சமூக அரங்குகள் ஆகியவை அடங்கும். இத்துடன் தோட்டங்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பகுதிகளையும் கொண்டிருக்கும். கூடுதலாக 53,000 சதுர மீட்டர் இரண்டு ஹெலிபேட்களுக்கும், 1,200 கார்கள் மற்றும் 30 பேருந்துகள் நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவும் ஒதுக்கப்படும். பாரம்பரிய கோயில் கட்டிடக்கலைக்கு ஏற்ப, எஃகு அல்லது இரும்பு இது எதுவும் இல்லாமல் கட்டமைப்பு கட்டப்பட்டு வருகிறது. எஃகு அல்லது இரும்பு கல்லை அரிக்கிறது மற்றும் ஒரு கட்டமைப்பின் ஆயுட்காலம் குறைக்கிறது என்றும் ,பொதுவாக கல்லால் செய்யப்பட்ட கோயில்கள் 1,000 ஆண்டுகளுக்கு மேல் ஆயுளுடன் கம்பீரமாக நிற்கும் என்றார் அவர் கூறியுள்ளார்.
கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்ஸைக் குறிக்கும் ஏழு கோபுரங்கள் இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மதிப்புகள், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களை சகித்துக்கொள்வது ஆகியவற்றின் அடையாளமாக இந்த கோயில் இருக்கும் என்று பாப்ஸ் பாதிரியார்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு கொபுரத்திலும் தெய்வங்களின் வாழ்க்கையிலிருந்து வரும் கதைகள் இருக்கும். கோயிலின் முகப்பில் சுவர் மற்றும் படிக்கட்டுகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் கலாச்சார மற்றும் தார்மீக கதைகளைக் கொண்டிருக்கும் ”என்று தேசாய் கூறினார்.