BREAKING NEWS
latest

Saturday, January 2, 2021

சவுதியில் பல இந்தியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது


(Note:புகைப்படம் செய்தி பதிவுக்கான மட்டும்)

சவுதியில் இருந்து இன்று(02/01/21) சனிக்கிழமை வெளியாகியுள்ள புதிய தகவல்கள் அடிப்படையில் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது, இதற்கான முக்கியமான காரணம் நாம் சர்வசாதாரணமாக செய்யும் இந்த தவறுகள் ஆகும்.

அதாவது  சாதாரண நம்முடைய தேவைகளுக்கு e-Transfer(ஆன்லைன் பண பரிமாற்றம்) மூலம் ரீசார்ஜ் மற்றும் உணவு ஆர்டர் இப்படி அன்றாட தேவைக்காக செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை..... ஆனால் உங்கள் நண்பர்கள் கையில் இருந்து 100 ரியால் கடன் வாங்கிய இருந்தீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அதை நீங்கள் திரும்பி கொடுக்கும் போது e-Transfer(ஆன்லைன் பண பரிமாற்றம்) வழியாக கொடுக்கும் போதுதான் அவருக்கு பிரச்சனை Start ஆகும்.

ஆம் உண்மை..... இப்படிபட்ட வழக்கில் குறைந்து நேற்று 10 இந்தியர்கள் தம்மாமில் மட்டும் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ரியாத் உள்ளிட்ட சவுதியின் பல்வேறு பகுதியில் இருந்தும் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலருக்கும் விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்புகள் வந்துள்ளது என்ற தகவலையும். இந்திய செய்திச் சானல் செய்தியாக வெளியிட்டுள்ளது. சவுதியில் முன்னரே நடைமுறையில் உள்ள சட்டம்தான் உங்கள் ஒப்பந்த ஊதியத்தை விடவும் அதிகமான பணம் வங்கி கணக்கில் வைத்திருப்பது குற்றமாகும் என்பது. தற்போது சவுதி பாதுகாப்பு துறை இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

(எ.கா)எதாவது ஒரு காரணத்திற்காக நண்பர்கள் பலர் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சாமாக மற்றொரு நண்பரின் வங்கி கணக்கில் பணத்தை e-Transfer(ஆன்லைன் பண பரிமாற்றம்) செய்யும் போது ஒரு பெரிய தொகை அவருடைய வங்கி கணக்கில்(சவுதி வங்கி கணக்கு) சேரும். இதை பாதுகாப்பு ஆதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். அவர்கள் பார்வையில் இது சட்டத்திற்கு புறம்பான  பணம் ஆக கருதப்படும். சிலர் சிறிய மாதச்சிட்டி நடத்துவார்கள். அவருக்கும் நண்பர்கள் இப்படிதான் எளிதில் பணத்தை அனுப்ப e-Transfer முறை பயன்படுத்துவார்கள். இப்படி எந்தவகையிலும் உங்கள் சவுதி மாத சம்பளத்தை விடவும் அதிகமான பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்தால் அது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றே கருதபட்டு நடவடிக்கைகளை அதிகாரிகள் துவங்கிய உள்ளனர்.

இதுபோல் சவுதி அரசு அனுமதி பெற்ற தொண்டு நிறுவனங்களை தவிர்த்து, சவுதியில் உள்ள அமைப்புகள் உட்பட யாருக்கும் உதவிகள் செய்ய பணத்தை வசூல் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இப்படிப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்வு செய்யவும்


Add your comments to சவுதியில் பல இந்தியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »