குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று டி.ஜி.சி.ஏ அறிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து முழுவதும் புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை நடத்த சுகாதார அமைச்சகம் சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது, இது முற்றிலும் இலவசமாக இருக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னர்,ஒரு விமானத்தில் வரும் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழைக் கொண்டுவருவதால் தோரயமாக 10 சதவீதம் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் குவைத்தில் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை என்ற புதிய நடைமுறை பின்பற்றப்பட்டாலும்,பயணி நாட்டிற்கு(குவைத்) வந்தவுடன் காட்ட வேண்டிய பி.சி.ஆர் சான்றிதழைக் கொண்டுவருவதில் இருந்து விலக்கு அளிக்கவில்லை என்றும்,அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Passengers arriving | Kuwait Airport | PCR Screening