குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் இன்று மதியம் நாட்டின் மக்களுக்கும்,அரபு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் தலைவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
2021-ஆம் புதிய வருடம் நம்பிக்கையின் மற்றும் நன்மையின் வருடமாக இருக்கட்டும் என்றும், பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு, நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம் உலக மக்களிடையே நிரந்தரமாக நிலவட்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். இந்த செய்தியை குவைத் அரசு ஏஜென்சி செய்தியாக வெளியிட்டுள்ளது.