துபாயில் உள்ள உணவகங்களுக்கு கடுமையான கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவிப்பு;நாட்டின் வலுவான பாதுகாப்பின் ஒரு பகுதியாக உணவகங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்
துபாயில் உள்ள உணவகங்களுக்கு கடுமையான கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவிப்பு
துபாயில் கோவிட் பரவல் தொடர்ந்தது அதிகரிக்கும் நிலையில், நாட்டின் வலுவான பாதுகாப்பின் ஒரு பகுதியாக உணவகங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாடிக்கையாளர் அமரும் இரண்டு மேசைகளுக்கு இடையில் மூன்று மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். முன்னதாக இது இரண்டு மீட்டர் தூரம் என்று வரையறை செயல்பட்டு இருந்தது. கூடுதலாக, ஒரு உணவகத்தில் ஒவ்வொரு மேசையிலும் அதிகபட்சம் 7 பேர் அமர்த்துவதற்கு மட்டுமே அனுமதி, முன்னர் 10 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். கஃபேக்களில், ஒரு சிறிய மேசையில் நான்கு பேரை மட்டுமே அமரவைக்க முடியும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான உச்ச குழு துறை இந்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
நாட்டில் புதிய கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளனர். கோவிட் பாதுகாப்பு விதிகளை பின்பற்றத் தவறியதாகக் கண்டறியப்பட்ட ஐந்து உணவகங்களை மூட துபாய் நகராட்சி அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர். துபாய் சுற்றுலா மற்றும் துபாய் பொருளாதாரத்தின் அதிகாரிகளும் இதுபோன்ற நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.