BREAKING NEWS
latest

Tuesday, January 19, 2021

குவைத்திலும் மரபணு மாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது;இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்


இங்கிலாந்தில் இருந்து குவைத்திற்கு வந்த இரண்டு பெண்களுக்கு மரபணு மாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் இருவரும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், ஆனால் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர்கள் இருவருமே மரபணு மாற்ற கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதாக சுகாதரத்துறை செய்தித் தொடர்பாளர்  அப்துல்லா அல் சனத் தெரிவித்தார்.  இதை தொடர்ந்தது இருவரும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு மரபணு மாற்ற வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சனத்  மேலும் விளங்கினார்.

சரியான முறையில் முகமூடி அணிவது, கைகளை கழுவுதல், நபர்களுக்கு இடையேயான தூரத்தை பேணுவது, பலவீனமான நோயெதிர்ப்பு சத்தி குறைவாக உள்ளவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் சனத் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.மேலும் இந்த பாதிப்பிலிருந்து விடுபட கோவிட் -19 தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இதனால் அனைவரும் அதற்கான ஆன்லைன் தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.
Kuwait Covid19 | New Virus | Today Find

Add your comments to குவைத்திலும் மரபணு மாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது;இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

« PREV
NEXT »