BREAKING NEWS
latest

Thursday, January 28, 2021

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களுக்கு அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு மேலும் நீட்டிக்கப்பட்டது

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களுக்கு அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு மேலும் நீட்டிக்கப்பட்டது;உள்துறை அமைச்சர் ஷேக் தமீர் அலி அவர்கள் தெரிவித்தார்

Image:Minister Aamir Ali

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களுக்கு அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு மேலும் நீட்டிக்கப்பட்டது

குவைத்தில் விசா சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள்(வெளிநாட்டு தொழிலாளர்கள்) அவற்றை சட்டப்பூர்வமாக்க அல்லது அபராதம் செலுத்தி நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்ட காலக்கெடு இந்த மாத இறுதியுடன் முடிவடையும் நிலையில்,மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும்,மனிதாபிமான அடிப்படையில் புதிய காலக்கெடு மார்ச்-2,2021 வரை நடைமுறையில் இருக்கும் என்று உள்துறை அமைச்சர் ஷேக் தமீர் அலி அவர்கள் தெரிவித்தார்.

புதிய மரபணு மாற்ற கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமான சேவைகளின் குறைபாடு,பல நாடுகள் பயணிகள் விமான சேவைகளை நிறுத்தியது மற்றும் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை அமைச்சகம், தங்கள் சேவைகளை ஆன்லைன் அமைப்புக்கு முழுமையாக மாற்றுவதன் காரணமாக இரண்டு வாரங்களுக்கு தற்காலிக நிறுத்திமாக வைத்தது,உள்ளிட்ட சூழ்நிலைகள் காரணமாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களுக்கு அறிவிக்கப்பட்ட பகுதிநேர பொது மன்னிப்பு இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் ஷேக் தமீர் அலி அவர்கள் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ அரசு தளத்தில் நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னர் இந்த பகுதிநேர பொதுமன்னிப்பு முதல் முறையாக கடந்த டிசம்பர்-1,2020 துவங்கி டிசம்பர் முடியும் வரையிலும், பின்னர் இந்த ஜனவரி-1,2021 துவங்கி ஜனவரி முடியும் வரையிலும் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச்-2 வரையில் நீட்டிக்கப்பட்ட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடைய குவைத்தில் 1.5 லட்சம் முதல் 1.8 லட்சம் வரையிலான தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்றும், கடந்த டிசம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பு 59 நாட்கள் கடந்த நிலையில் இதுவரையில் 5000 ற்கும் மேற்பட்ட நபர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்களுக்கு அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு மேலும் நீட்டிக்கப்பட்டது

« PREV
NEXT »