குவைத் எண்ணெய் நிறுவனத்தின் வல்லுநர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய எண்ணெய் வயல்களை கண்டுபிடித்துள்ளனர்,என்று நீர்வள மற்றும் எண்ணெய் வளத்துறை அமைச்சர் முஹம்மது அல் ஃபரிஸ் அறிவித்தார். நாட்டின் வடமேற்கு பகுதியில் புதிதாக இரண்டு எண்ணெய் வயல்களைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது வடக்கு குவைத்தின் அல் கஷானியா பகுதியில் இருப்பதாகவும், கிரேட் பெர்கன் புலத்தின் வடக்கு பகுதியில் குவைத் எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் ஆய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் இவை கண்டறியப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இந்த புதிய எண்ணெய் இருப்புக்கள் இதுவரை அடையாளம் காணப்படாத பகுதிகளில் அமைந்துள்ளன, மேலும் புதிய கண்டுபிடிப்புகள் KOC 2040 திட்டத்தின் கீழ் எண்ணெய் சேமிப்பு மற்றும் உற்பத்தி திறன்அதிகரிப்பதற்கு நேரடியாக பங்களிக்கும் எனவும்,நெருக்கடியின் போது ஏற்படும் மோசமான நிலைமைகளை சமாளிப்பதில் முக்கியத்துவத்தை அளிக்கிறது எனவும்,KOC இன் இந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளை அமைச்சர் அல் ஃபரிஸ் பாராட்டினார்.