BREAKING NEWS
latest

Wednesday, January 6, 2021

குவைத்தின் முன்னாள் பிரதமரை,இந்திய தூதர் அவர்கள் இன்று சந்தித்தார்

(தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் ஷேக் நாசர் சந்திப்பு)

குவைத் இந்திய தூதரகதின் தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் இன்று புதன்கிழமை(06/01/21) குவைத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் நாசர் அல்-அகமது அல்-ஜாபர் அல்-முபாரக் அல்-சபா அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் நட்புறவு, நலன் விசாரிப்பு மற்றும் பிற விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர் என்று இந்திய தூதரகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகத்தின், தூதராக சிபி ஜார்ஜ் கடந்த ஆகஸ்டில் பதவியேற்ற பின்னர், குவைத்தின் ஒவ்வொரு மாகாணங்களின் தலைமை பொறுப்பு அதிகாரிகள்,குவைத் நாட்டின் பாதுகாப்பு துறை அதிகாரிகள், உள்ளிட்ட பல்வேறு துறையின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் இருதர‌ப்பு பரஸ்பர நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து விவாதித்தும் வருகிறார்.மேலும் குவைத் இந்திய தூதரகத்தில் மற்ற தூதரக அதிகாரிகள் பதவியில் இருந்த நேரத்தில் செய்யப்படாத பல்வேறுபட்ட மாற்றங்களை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

குவைத்தில் உள்ள பல்வேறுபட்ட இந்திய அமைப்பு பிரதிநிதிகளுடன் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் மாதத்தில் ஒருமுறை குறைகேட்பு கூட்டம் உள்ளிட்டவை நடத்தி வருகிறார். சிபி ஜார்ஜ் அவர்கள் இந்திய தொழிலாளர்களுக்கான சட்டரீதியான இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்கு வழக்கறிஞர் குழுவினை ஏற்பாடு செய்துள்ளார். மேலும் தூதரகத்தில் பல்வேறு தேவைகள் சம்மந்தமான குவைத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இலவச மத்தியான உணவுக்கு ஏற்பாடும் செய்துள்ளார். 


Add your comments to குவைத்தின் முன்னாள் பிரதமரை,இந்திய தூதர் அவர்கள் இன்று சந்தித்தார்

« PREV
NEXT »