குவைத்தில் பிரபலமான சீரியல் மற்றும் நாடக நடிகர் சாதிக் அல் திபஸ் காலமானார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மரணமடைந்தார் என்று,அவரது மகள் டானா ட்விட்டரில் அறிவித்தார். அவருக்கு 62-வயது ஆகிறது. அடக்கம் இன்று பிற்பகல் சுலேபிகாட் கல்லறை தோட்டத்தில் நடக்கும்.
தொலைக்காட்சி நாடகத்தின் மூலம் 1983 ஆம் ஆண்டில் கலை உலகில் நுழைந்தார்.பின்னர் அவர் பல குவைத் தொலைக்காட்சி, வானொலி நாடகம் மற்றும் சீரியல்களில் நடித்தார் தன்னிச்சையான நடிப்பு பாணியின் மூலம் சிறந்த கதாபாத்திரங்களை உயிர்ப்பித்தார்.
''காசித் கைர்", "சூக் அல் மக்காசிஸ்", "அல்-ஜவரா, அல் சயீத்", "டாக் சுஹைல்", "புகல்பீன்" போன்ற சீரியல்களில் சிறப்பாக நடித்துள்ள அவர் குவைத் மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். சாதிக் அல் திபஸ் மறைவுக்கு குவைத்தில் பல துறைகளில் உள்ள முக்கிய நபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.