குவைத் ஜஹரா நகராட்சி அதிகாரிகள் அங்கு சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்பு முகாம்களை(தற்காலிக கூடாரங்களை) அகற்றிய போது துப்பாக்கிகள், குண்டுகள், கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் பல தோட்டாக்கள் அடங்கிய பையினை கண்டுபிடித்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஜஹரா நகராட்சியின்,மீறல் அகற்றுதல் துறையின் தலைவர் சுலைமான் அல்-கைஸ் கூறுகையில், ஜஹ்ரா பகுதியிலுள்ள கல்லறை தோட்டத்திற்கு பின்னால் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட தற்காலிக ஆக்கிரமிப்பு முகாம்களை அகற்றும்போது அதில் ஒரு கூடாரத்தில் வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய பை கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த நடவடிக்கையின் போது முகாம் உரிமையாளர் உடனிருந்தார்,இது தன்னுடைய முகாம் என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் உறுதிப்படுத்தினார், எனவே வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலாதிக்க விசாரணைக்கு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த நபரை நகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தார் என்று செய்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.