சவுதியில் தமிழர் ஒருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டார்;அவருடன் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நண்பர் காயங்களுடன் உயிர் தப்பினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
சவுதியில் தமிழர் ஒருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டார்
சவுதியில் இந்திய, தமிழகத்தைச் சேர்ந்த நபர் அவருடைய பணியிடத்தில் உள்ள அறையில் வைத்து கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டிசம்பர் 26 அன்று நடந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகேசன் அண்ணாமலை(வயது-49), அல்-காசிம் அருகிலுள்ள மிட்னாப் என்ற இடத்தில் வைத்து திருடர்களால் தலையில் இருப்பு கம்பியால் தாக்கி கொடூரமான கொலை செய்யப்பட்டார். அவருடன் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நண்பர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணியளவில், நான்கு சவுதி நாட்டவர் குழுவாக அவர்கள் வேலை செய்யும் ஆடு வளர்ப்பு மையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புக்கு வந்து வெளியே நின்று துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனவும், வீட்டைவிட்டு வெளியேவர கூறியதாகவும்,தாக்குதலில் இருந்து தப்பிய இஷான் அலி கூறினார். நான்கு பேர் குழுவில் இரண்டு பேர் உள்ளே நுழைந்து அண்ணாமலை சுட்ட பின்னர் இரும்பு கம்பியால் தலையில் பலமுறை அடித்தனர். பின்னர் அந்த கும்பல் சுமார் 40 ஆடுகளைத் திருடிக்கொண்டு தப்பித்தது. இறந்த அண்ணாமலை மற்றும் அலி ஆகியோரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததால் ஸ்பான்சருக்கு சரியான நேரத்தில் இது குறித்து அறிவிக்க முடியவில்லை எனவும், நீண்ட முயற்சிக்கு பிறகு கட்டிகளை அவிழ்த்த அலி ஸ்பான்சரும் இது குறித்து தகவல் கொடுத்தார்,இதையடுத்து சம்பவம் நடந்த இனத்திற்கு அதிகாரிகள் வந்ததாக இஷான் அலி கூறினார்.
இதையடுத்து இஷான் அலி கொடுத்த தகவல் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார் மற்ற மூவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து முருகேசனின் உடலை தாயகம் அனுப்பும் பணி நடந்து வருவதாகவும், அதிகாரிகளின் அனுமதி பெற்றவுடன் விரைவில் உடல் தாயகம் அனுப்பப்படும் என்றும் சமூக சேவகர் சலாம் பாரதி தெரிவித்தார். இவருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.