(அஸ்மி விடுதலை,சென்னை நீதிமன்றம் முன்னர்,2002)
குவைத்தில் 2002-யில் நடந்த இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அமீரக பத்திரிகை Repost செய்து இருந்தது,இது தற்செயலாக கண்ணில்ப்பட்டது. குவைத்தில் இருந்து மார்ச்23,2002 ஒரு காதல் ஜோடி சென்னை(மெட்ராஸ்) விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை,அங்கிருந்து தான் பிரச்சனை துவங்கியது.
குவைத்தில் செல்வ செழிப்பான வீட்டில், அரபிக்கு மகளாக பிறந்தவர் ஃபலக் அல் அஸ்மி(வயது-23), அந்த வீட்டில் ஓட்டுநராக வேலைக்கு வந்த இந்தியர் காதர் பாஷா(வயது-28) ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். தாயை இழந்த அஸ்மியை வெளியே அழைத்துச் செல்வது பாஷாவின் வேலையாக இருந்தது. பயணங்களில் இவர்களில் இடையிலான கலந்துரையாடல் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து பாஷா ஊர் திரும்பிய நேரத்தில் அஸ்மி அவருடன் இந்தியா திரும்புவதில் உறுதியாக இருந்தார்.
அந்த நேரத்தில் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சி அடையவில்லை, குவைத்தில் இருந்து போலியான பாஸ்போட் தயார் செய்து இருவரும் குவைத் விமான நிலையத்தில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினர். அங்கு அதிகாரிகள் அஸ்மியின் பாஸ்போர்ட் போலியானது என்பதை கண்டறிந்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அரபு மொழியில் மட்டுமே பதில் அளித்தவண்ணம் காணப்பட்டார். இதையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தொடர்ந்து நடந்த விசாரணையில் அஸ்மி குவைத் குடிமகள் என்பதை உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து அஸ்மியை கைது செய்த, போலிசார் வேலூர் மத்தியசிறையில் அடைத்தனர். இந்த பிரச்சினை சர்வதேச அளவில் பேசப்பட்ட நிலையில் இருநாடுகளின் வெளியுறவு பிரச்சினை என்பதால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு அஸ்மியிடம் அதிகாரிகள்(மொழிப் பெயர்ப்பு) மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த காரணத்திற்காகவும் நான் குவைத் திரும்ப மாட்டேன் என்றும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து வெளிநாட்டு பெண்மணி என்பதால் அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதா என்பதை அறிய மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தப்பட்டத்தில் கர்ப்பமாக இருக்கின்ற தகவலும் வெளியானது.
தொடர்ந்து அல்-அஸ்மிக்கு இந்தியாவில் புகலிடம் வழங்கவும், அவருக்கு இந்திய குடியுரிமையை வழங்கவும் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அன்றைய மத்திய உள்துறை மந்திரியாக இருந்த எல்.கே.அத்வானி இருநாட்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில் அவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்த மாட்டோம் என்று உறுதியளித்தார். இதையடுத்து சென்னை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில்
ஏப்பல்-1 ஆம்,2002 தேதி ஆஸ்மி விடுதலை செய்யட்டார். இதையடுத்து ஜெயலலிதா அவர்கள் உத்தரவின் அடிப்படையில் பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை வழங்கி தமிழக காவல்துறை பாதுகாப்புடன் சென்னையில் இருந்து, அன்றைய ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 450 கி.மீ தெற்கே உள்ள மைடுகூர் அருகிலுள்ள சித்தப்பள்ளி கிராமத்திற்கு அழைத்து சென்று பாஷாவின் பெற்றோர்களிம் அஸ்மியின் பாதுகாப்பில் உறுதிமொழி வாங்கிவிட்டு பத்திரமாக விட்டுவந்தனர்.
இதையடுத்து அஸ்மி மற்றும் பாஷா திருமணம் செய்து கொண்டதாக அன்றைய ஹைதராபாத்தில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அன்றைய ஆந்திரா அரசு இருவருக்கும் அரசு வேலை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் அஸ்மிக்கு அரபு ஆசிரியராகவும், பாஷாவுக்கு தபால் நிலையத்திலும் வேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை(மகன்) குறித்த செய்தியையும் அன்றைய பத்திகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இவர்கள் காதல் காரணமாக அன்றைய காலத்தில் குவைத்தில் வேலை செய்துவந்த இந்தியர்கள் பலரும் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எடிட்டர்: Arab tamil daily Team