BREAKING NEWS
latest

Saturday, January 16, 2021

கொரோனா மூலம் பாதிக்கப்படும் ஒருவரின் நுரையீரல் புகைபிடிக்கும் நபரை விட கடுமையான பாதிக்கபடுகிறது


(மருத்துவர் வெளியிட்டுள்ள எக்ஸ்ரே)

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நுரையீரல் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலை விட மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவர் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கோவிட்டிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரலில் ஏற்படும் காயங்கள் மற்றும் வடுக்கள் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில் காணப்படுவதை விட மோசமானதாக உள்ளது என்றார். டெக்சாஸ் பல்கலைக்கழக தொழில்நுட்ப அறிவியல் மையத்தின் உதவி பேராசிரியர் டாக்டர்: பிரிட்டானி கெண்டலின் அவர்கள் எக்ஸ்ரே புகைப்படங்களுடன் இதை விளக்குகிறார்.இதை அவர் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு கோவிட் சிகிச்சை அளித்த மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இதற்காக மூன்று எக்ஸ்ரே படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சாதாரணமாக ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு நுரையீரல் இருண்டு இருக்கும் மற்றும் தெளிவாக தெரியும். புகைப்பிடிப்பவரின் நுரையீரல் ஓரளவு வெண்மையானதாக இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் நோயாளியின் நுரையீரலுக்கு கண்ணுக்கு தெரியாதது. கோவிட் பாதிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் முன்பு எச்சரித்திருந்தனர். சோர்வு, மூச்சுத் திணறல், படபடப்பு, மூட்டுவலி மற்றும் தசை வலி ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்த விஷயத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பின்னர், பலரும் ஆலோசனை பெறுவதற்காக மருத்துவரை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

Heath News | Covid19 Virus | New Update

Add your comments to கொரோனா மூலம் பாதிக்கப்படும் ஒருவரின் நுரையீரல் புகைபிடிக்கும் நபரை விட கடுமையான பாதிக்கபடுகிறது

« PREV
NEXT »