துபாயில் சாலைகளில் சிவப்பு தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன; தனியார் வாகனங்களில் நுழைந்தால் 600 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்;இதில் அரசு பேருந்துகள் மற்றும் கட்டண டாக்சிகளுக்கு மட்டுமே அனுமதி, தனியார் வாகனங்கள் சிவப்பு பாதையில் நுழைந்தால் 600 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்
Image credit:WAM
துபாயில் சாலைகளில் சிவப்பு தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன; தனியார் வாகனங்களில் நுழைந்தால் 600 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்
துபாயில் உள்ள இந்த புதிய சிவப்பு தடங்களுடன் உள்ள சாலை அமைப்பு பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசல்களில் சிக்குவதைத் தவிர்ப்பதும் என்று துபாய் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி்த்துள்ளது. இந்த தடங்களில் தனியார் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதில் அரசு பேருந்துகள் மற்றும் கட்டண டாக்சிகளுக்கு மட்டுமே அனுமதி, தனியார் வாகனங்கள் சிவப்பு பாதையில் நுழைந்தால் 600 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்.
துபாய் காலித் பின் வலீத் தெருவில் அமைக்கப்பட்ட சிவப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த புதிய சிவப்பு தடங்கள் பதிக்கப்பட்ட சாலைகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்குவதைத் தவிர்ப்பதும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பேருந்துகள், டாக்சிகள் தவிர, இந்த வழிகளை காவல்துறை,சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவை பயன்படுத்தலாம்.
துபாயில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் சிவப்பு தடங்கள் அமைக்க திட்டம் உள்ளது.பொது போக்குவரத்து பயனர்களின் பயண நேரத்தை இது 24 சதவிகிதம் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதால், எரிபொருள் செலவுகள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றைக் குறைக்கலாம் என்பது அரசின் முக்கிய நோக்கத்திற்காக கொண்டுள்ளது.