துபாயில் புதன்கிழமை(இன்று) காலை லாரி மீது பேருந்து மோதியதில் விபத்தில் 27 தொழிலாளர்கள் காயமடைந்ததனர். அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை,இந்த சம்பவம் துபாயின் Jebel Ali Industrial பகுதியில் காலை 8.45 மணியளவில் நடந்தது. தொழிலாளர்களில் 4 பேரை தவிர மற்றவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன எனவும், அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று என்எம்சி ஹெல்த்கேர் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அனைவரும் அங்குள்ள வாசனை திரவிய தயாரிக்கும் தொழிற்சாலையிலும் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள், விபத்து நடந்த சில நிமிடங்களில் துபாய் கார்ப்பரேஷனின் ஆம்புலன்ஸ் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள என்எம்சி ராயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து துபாய் காவல்துறை அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், எந்தவிதமான உயிரிழப்புகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரம் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொது போக்குவரத்துத் துறை இயக்குநர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான்கு தொழிலாளர்கள் நடுத்தர காயங்களுக்கு ஆளாகியுள்ளனர், 23 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அனைத்து வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டவும், போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் சாலைகளில் வேக வரம்புகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடைய காயமடைந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 30 என்ற தகவலும் வெளியாகியுள்ளது.