துபாயில் இந்திய பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்,இந்திய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது;கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் உள்ள நேபிலில் வைத்து இந்த சம்பவம் நடந்தது
துபாயில் இந்திய பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்,இந்திய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
துபாயில் இந்திய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இந்திய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் உள்ள நேபிலில் வைத்து நடந்தது. காலை நேரத்தில் தன்னுடைய குழந்தையை பள்ளி அனுப்புவதற்காக பேருந்தில் அழைத்துச் சென்று வெளியே விட்டு, மீண்டும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த 39-வயது இந்தியப் பெண்ணை துரத்திச் சென்று பின்னர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, படுக்கையறைக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த நேரத்தில் தன்னை காப்பாற்றும்படி உதவிக்கு அழைத்ததும் அது யாரும் கேட்கவில்லை. தொடர்ந்து குற்றவாளி அந்த இளம் பெண்ணின் நிர்வாண காட்சிகளை மொபைல் கேமராவில் பதிவு செய்துள்ளார், மேலும் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தால் காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டினான்.
இத்துடன் அவர்களுடைய குடியிருப்பில் இருந்து 200 திர்ஹாம்களையும் திருடினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டி ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்தவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும், எப்போதும் எதாவது தேவைக்கு வெளியே சென்று வரும் நேரங்களில் தன்னை கண்காணித்து வருவதை கவனித்தேன் எனவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டிற்கு திரும்பிய கணவருக்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார்,இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். இரண்டு நாட்களுக்குள் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர் அங்குள்ள பனியாஸ் தெருவில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் அவன் திருடிய 200 திர்ஹாம் பணத்தில் 135 திர்ஹாம் பணத்தை அவனிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குற்றம் நடந்த நேரத்தில் அவர் குடிபோதையில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். அவன் மீதான கற்பழிப்பு, திருட்டு மற்றும் சட்டவிரோத குடிப்பழக்கம் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையின் இறுதியில் தற்போது முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட நபர் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறி்ப்பிடத்தக்கது.