துபாயில் அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது;பிப்ரவரி-19 வரை செய்யக்கூடாது என்று துபாய் சுகாதார ஆணையம் மேலும் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது
துபாயில் அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
துபாயில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அத்தியாவசியமற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளையும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க இன்று(21/01/21) அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வெளியானது முதல் உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சைகள் பிப்ரவரி-19 வரை செய்யக்கூடாது என்று துபாய் சுகாதார ஆணையம் மேலும் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது. அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மருத்துவமனைகள் மற்றும் வாரத்தில் ஒரு நாள் அறுவை சிகிச்சை செய்யும் கிளினிக்குகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
சம்பந்தப்பட்ட சுகாதரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த ஒழுங்குமுறை காலம் நீட்டிக்கப்படலாம் என்று கூறுகிறது. அவசரகால அடிப்படையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் மட்டுமே தொடரப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல் , இதய மற்றும் கதிரியக்கவியல் அறுவை சிகிச்சை, சிறுநீரக கற்கள் மற்றும் ஸ்டெண்டுகளை அகற்றுதல் போன்றவையும், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவத் துறைகளில் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்தவும் மிகவும் கடுமையான பாதுகாப்புகள் நடைமுறைகளை தயார் செய்யவும் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக துபாய் தலைமை ஊடகபுபிரிவு தெரிவித்துள்ளது. புதிய நடவடிக்கை கோவிட் நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்கும் அதற்கான சுகாதார அமைப்புகளை தயார் செய்யவும் உதவும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
UAE Moh | UAE surgery | UAE Patient