குவைத்தில் பணிப்பெண் கொலையில் ரத்தப் பணத்தை செலுத்துவதை நிறுத்துமாறு பிலிப்பைன்ஸ் வெளியுறவு துறை செயலாளர் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்
குவைத்தில் பணிப்பெண் கொலையில் ரத்தப் பணத்தை செலுத்துவதை நிறுத்துமாறு பிலிப்பைன்ஸ் வெளியுறவு அறிவுத்தல்
குவைத்தில் நடந்த பிலிப்பைன்ஸ் பணிப்பெண் கொலை தொடர்பாக 50,000 தினார்(160,000 டாலர்) ரத்தப் பணத்தை செலுத்தும் திட்டத்தை நிறுத்துமாறு பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். ஜீன்லின் பேடர்னல் வில்லாவெண்டே(வயது-26), கடந்த 2019 டிசம்பரில் தனது முதலாளியின் மனைவியால் கொடூரமான சித்தரவதை காரணமாக ஏற்பட்ட காயங்களால் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் இறுதியில், கடந்த 2020-ஆண்டு டிசம்பரில், குவைத் நீதிமன்றம் வில்லாவெண்டேவின் பெண் முதலாளியான குவைத் பெண்ணுக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்ற தீர்ப்பு வழங்கியது, அதே நேரத்தில் இது தொடர்பாக புகாரளிக்காத மற்றும் குற்றத்தை மறைத்த வழக்கில் கணவருக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் தியோடோரோ லோக்சின் ஜூனியர், வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குவைத்துக்கான பிலிப்பைன்ஸ் தூதர் முகமது நூர்டின் பெண்டோசினா லோமண்டோட்டிற்கு, விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தியதாக அறிவித்தார். கடந்த டிசம்பர்,26-ஆம் தேதியில் பதிவு செய்த தனது பதிவை மறு ட்வீட் செய்த லோக்சின், கொலை செய்யப்பட்ட பணிப்பெண் வில்லாவெண்டேவின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். வில்லாவெண்டே கொலை வழக்கு நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது எனவும், இதன் காரணமாக 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு தொழிலாளர்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்த பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தைத் தூண்டியது எனவும், குவைத் அதிகாரிகள் வில்லாவெண்டேவின் முதலாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்து பிலிப்பைன்ஸ் வீட்டு ஊழியர்களுக்கு சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியபோது தடை நீக்கப்பட்டது என்றார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வில்லாவெண்டே தனது முதலாளியின் மனைவியால் பல மாதங்களாக சித்திரவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டதார் எனவும், அவரது இறப்பு சான்றிதழில் இதயம், நுரையீரல் ஆகியவற்றில் கடுமையான தொற்று மற்றும் வாஸ்குலர் நரம்பு மண்டலத்தில் பல காயங்கள் காரணமாக அவர் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானதை சுட்டிக்காட்டினார். வில்லாவெண்டேவின் உடல் பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுப் பிரிவு நடத்திய தடயவியல் பரிசோதனையும் பாலியல் துஷ்பிரயோகத்தின் தெளிவான அறிகுறிகளும்,மேலும் அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் நடந்த உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் தடையங்களையும் கண்டறிந்தனர்.