இந்தியாவின் முதல் Batch ஜெனேகா தடுப்பூசி திங்கள்கிழமை காலை குவைத்திற்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது;குவைத் சுகாதார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை இதற்கான ஒப்புதல் அளித்தது
Image:ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி
இந்தியாவின் முதல் Batch ஜெனேகா தடுப்பூசி திங்கள்கிழமை காலை குவைத்திற்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின்(Serum Institute of India) தயாரிப்பான ஆக்ஸ்போர்டு- ஜெனேகா தடுப்பூசியின் முதல் Batch, குவைத் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகு 200,000 டோஸ் தடுப்பூசி மருந்து திங்கள்கிழமை காலை நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இரண்டாவது Batch-யில் 800,000 டோஸ் தடுப்பூசி பிப்ரவரி மாத இறுதிக்குள் குவைத் வந்து சேரும் என்றும் தெரிகிறது.இது தொடர்பான செய்தியை தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் மொத்த ஏற்றுமதி தடுப்பூசி மருந்து 400,000 நபர்களுக்கு செலுத்துவதற்கு போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களை வைரஸிலிருந்து பாதுகாக்க அஸ்ட்ரா ஜெனெகாவின் உரிமத்தின் கீழ் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட "ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனெகா" தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த குவைத் சுகாதரத்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.இதற்கிடையே இந்தியாவில் இருந்து 100,000 கோவிட் தடுப்பூசி இன்று(31/01/21) ஓமானை சென்றடைந்தது. இதுபோல் இந்தியாவின் தயாரிப்பான அஸ்ட்ரா தடுப்பூசி இலங்கை, பஹ்ரைன், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், மியான்மர், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு மக்களுக்கு வழங்கும் பணிகளை அந்தந்த நாடுகளின் சுகாதரத்துறை துவங்கியுள்ளது.