இவர்தான் நாட்டின் உண்மையான அரசு ஊழியர்; ஷேக் முகமது அரசு அதிகாரியை வாழ்த்தி செய்தி வெளியிட்டார்;பெண்மணி ஒருவருக்கு உதவிய நிலையில் அதிகாரியை இவ்வாறு இவ்வாறு இன்று மாலையில் வாழ்த்தியுள்ளார்
இவர்தான் நாட்டின் உண்மையான அரசு ஊழியர்; ஷேக் முகமது அரசு அதிகாரியை வாழ்த்தி செய்தி வெளியிட்டார்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் துபாய் மெட்ரோ ஊழியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நபரை வாழ்த்தி வருகின்றனர். துபாய் மெட்ரோவில் பயணம் செய்த பத்திரிகையாளர் பெண்மணி ஒருவருக்கு உதவிய நிலைய அதிகாரியை ஷேக் முகமது மாலையில் வாழ்த்தினார்.
நேற்றைய தினம் எமிரேட்ஸ் டவர் மெட்ரோ நிலையத்தில் உள்ள அதிகாரி தனக்கு உதவியது தொடர்பான செய்தியை விவரித்து ஒரு ட்வீட்-ஐ தன்னுடைய பக்கத்தில் பதிவு செய்தார். இந்த செய்தியை தற்போது ஷேக் முகமது "உண்மையான பொது சேவையின் நேர்மையான உதாரணம்’" இவர் என்று மறு ட்வீட் செய்து வாழ்த்தியுள்ளார்.
மெட்ரோவில் பயணம் செய்த பத்திரிகையாளரான ஆஷ்லே லீக் ஸ்டூவர்ட்டின் அவர்களின் நோல் கார்டில்(மின்னணு பணம் அட்டை) பணம் இல்லை. மேலும் பணப்பையை எடுக்கவும் மறந்துவிட்டார்கள். ஆனால் ஊழியர் இதை உணர்ந்ததும், அவர் தனது கையில் இருந்த பணத்தை நோல் கார்டில் போட்டு உதவி செய்தார். பின்னர் அவர் அதை திருப்பிச் செலுத்த முயன்றார், ஆனால் அந்த அதிகாரி பணத்தை திரும்ப பெற மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அந்தப் பெண் அந்த ஊழியரின் படம் உட்பட, 'ஸ்டாஃப் சூப்பர்மேன்' என்றும் வர்ணித்து பதிவு செய்திருந்தார். இந்த பதிவை ஷேக் முகமது மாலையில் மறு ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்தார்.