இந்தியா சர்வதேச விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28 வரை மீண்டும் நீட்டித்துள்ளது;சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் மாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் இதை தெரிவித்துள்ளது
இந்தியா சர்வதேச விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28 வரை மீண்டும் நீட்டித்துள்ளது
இந்தியா சர்வதேச விமானங்களுக்கான தடையை கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு மிண்டும் பிப்ரவரி-28,2021 வரை நீட்டித்துள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(டிஜிசிஏ) மாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இருப்பினும்,தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் இந்த சேவை தொடரும் என்றும் விளக்கமளித்துள்ளது. இந்திய சிவில் விமான போக்குவரத்துறை கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயண சேவைகள் கடந்த ஆண்டு மார்ச்-23,2020 முதல் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையில், இந்தியா அரசு சார்பில் கடந்த மே மாதத்திலிருந்து வந்தே பாரத் மிஷன் என்ற திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் ஜூலை முதல் சில நாடுகளுடன் இருதரப்பு விமான குமிழி ஒப்பந்தங்களின் கீழ் சர்வதேச விமான சேவைகளை தொடர்ந்து இயக்கி வருகிறது. இந்தியா Air-Bubble அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து,யு.ஏ.இ, கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 24 -க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மேல் குறிப்பிட்ட நாடுகளுக்கும் இடையே சிறப்பு சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் இந்தியா சிவில் விமான போக்குவரத்துறை சுற்றறிக்கையில் சர்வதே நாடுகளுக்கு இடையிலான சரக்கு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு அனுமதி அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சில விமானங்களின் செயல்பாடுகளை இந்த உத்தரவு பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.