BREAKING NEWS
latest

Thursday, January 7, 2021

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார்

(ஜெயசங்கர் சந்திப்பு புகைப்படம்)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை சென்றார். இதையடுத்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே, வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள், மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் சந்திப்பில் கூறியதாவது: 

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசியை சர்வதேச நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை அடிபடையில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு இலங்கை அரசு எல்லைகளை மீறியதற்காக கைது செய்திருக்கும் இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது எனவும், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, 13 அரசியல் சாசன திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுகள் இலங்கையின் எதிர்கால நலனுக்கு உகந்தது என்றார். 

மேலும் இரண்டு நாடுகளின் உயர் அதிகாரிகள் தலைமையில் பல்வேறு பிரச்சினைகள், ஒத்துழைப்பு உள்ளிடவை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.




Add your comments to இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார்

« PREV
NEXT »