இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சாலைவழி 20 நாட்களில் ஒரு பயணம்;நவம்பர்-14 முதல் துவங்கவுள்ள இந்த பயணம் 5 நாடுகள் வழியாக சிங்கப்பூர் சென்றடையும்
Image credit: அவஞ்சர் ஓவர்லேன்ட்
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சாலைவழி 20 நாட்களில் ஒரு பயணம்;நவம்பர்-14 முதல் துவங்குகிறது
சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பினால் 4 மணிநேரத்தில் சிங்கப்பூர் ஷாங்கி சர்வதேச விமான நிலையத்தை எளிதாக அடையலாம். ஆனால் பேருந்து மூலம் இந்த பயணம் சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலுமாக ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் ,இந்நிலையில் ஹரியான மாநிலம், குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு டிராவல் ஏஜென்சி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையினை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 5 நாடுகள் வழியாக சிங்கப்பூருக்கு 4500 கிலோமீட்டர் பயணத்தை 20 நாட்களில் வழங்கும் வகையில் வருகின்ற நவம்பர்-14 அன்று முதல் சேவை துவங்கி டிசம்பர்-3 அன்று சிங்கப்பூரை அடையும் விதத்தில் திட்டமிட்டுள்ளது.
து முழுக்க முழுக்க சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளித்து துவங்கவுள்ளதாக டிராவல் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். நமது வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த பேருந்தில் இருக்கும். இந்தியாவில் இருந்து கிளம்பும் பேருந்து மியன்மார்,மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் வழியாக சிங்கப்பூரை சென்றடையும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. "அவஞ்சர் ஓவர்லேன்ட்" என்ற இந்த டிராவல் ஏஜென்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலில் வருபவர்களுக்கு மட்டும் பயணச்சீட்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இதே நிறுவனம் 1957 களில் இயக்கத்தில் இருந்த கொல்கத்தா- லண்டன் பேருந்து சேவையினை மீண்டும் துவங்க உள்ளதாகவும்,ஆனால் சற்று மாறுதலாக இந்தமுறை புதிய பேருந்து சேவை டெல்லி இருந்து லண்டனுக்கு துவங்கும் என்று அறிவித்துள்ளது.18 நாடுகள் வழியாக 20,000 கிலோமீட்டர் பயணித்து 70 நாட்களில் லண்டனை சென்றடையும். இதையடுத்து மீண்டும் உலகின் மிக நீண்டதூர பேருந்து சேவையாக, டெல்லியில் இருந்து துவங்கவுள்ள லண்டன் சேவை இருக்கும் என்ற சிறப்பாகும். டெல்லி இருந்து வருகின்ற மே-2 துவங்கி ஜூலை-10 லண்டனை சென்றடையும் விதத்தில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்த நிறுவனம் பேருந்து சேவைகளை துவங்குகின்றன இது தொடர்பான முழு விபரங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளனர்.