குவைத்தில் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்த இந்தியர் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர் பெயர் ஷியாம்குமார்(வயது-48) எனவும், இந்திய கேரளா மாநிலம் மலப்புரம், நிலம்பூர் மற்றும் எடக்கரா பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்தி இன்று மாலையில் வெளியிட்டுள்ளது. அவர் Dar Al மருத்துவமனையில் உள்ள காப்பீட்டுத் துறையில் பணிபுரிந்து வந்தார்.
கொரோனா நோய்த்தொற்றைத் பாதிப்பைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் மிஸ்ரிஃப் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு அனூபா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அனூபா சுகாதரத்துறை செவிலியர் ஆவார். சர்வதேச கொரோனா சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
குவைத்தில் கோரோனா போரட்டத்தில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த மூன்றாவது சுகாதரத்துறை ஊழியர் இவர் ஆவார். இதில் ஒருவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றொரு நபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பெண் செவிலியர். இதுபோல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதரத்துறை ஊழியர்கள் பலரும் கொரோனா போராட்டத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். இந்தியர்கள் பலரும் கோரோனா காரணமாக குவைத்தில் உயிரிழந்ததனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.