குவைத்தில் இந்தியர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது; சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை செய்தும் அதிகாரங்களையும் தாக்க முயன்ற நிலையில் சுட்டு கைது செய்தனர்
குவைத்தில் இந்தியருக்கு கத்திக்குத்து விழுந்தது;சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் சுட்டு கைது செய்தனர்
குவைத் பாதுகாப்பு துறையினை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியில அஹ்மதி கவர்னரேட்டின் போக்குவரத்துத் துறையின் ரோந்துப் படை போலீசார் இன்று(22/01/21) சனி Fahaheel தொழில்துறை பகுதியில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது,ரோந்து வாகனத்தில் சென்ற அதிகாரிகள் ஒரு நபரை அசாதாரண நிலையில் கண்டனர். அவர் ஓட்டிய வாகனம் பொறுப்பற்ற முறையில் அங்குமிங்குமாக சாலையில் சென்றபடி இருந்தது இதையடு்த்து அதிகாரி குடிமகனிடம் வாகனத்தை நிறுத்தச் சொன்னார், ஆனால் அவர் பாதுகாப்பு நபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவில்லை, வாகனத்தை ஓட்டிச் சென்று பஞ்சர் கடைகளில் ஒன்றின் முன் நின்று கத்தியைக் கொண்டு தனது வாகனத்திலிருந்து இறங்கினார். எந்தவிதமான காரணமும் இல்லாமல் பஞ்சர் தொழிலாளியை(இந்தியரை) குத்தினார்,பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தொடர்ந்து Fahaheel நெடுஞ்சாலையில் சென்ற சந்தேக நபரை அதிகாரிகள் தொடர்ந்து துரத்திச் சென்றதாகவும், அவரைத் தடுக்க முயன்றபோது, அவர் போக்குவரத்து ரோந்து வானங்களின் மீது அவருடைய வாகனத்தை கொண்டு மோதியதாகவும், பின்னர் கத்தியை எடுத்துக் கொண்டு அதிகாரியை நோக்கி குத்து முன்னேறினான். இதையடுத்து அதிகாரி எச்சரிக்கை செய்ய தன்னுடைய துப்பாக்கி எடுத்து இரண்டு தோட்டாக்களை வானத்தை நோக்கி சுட்டார், ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட நபர் தொடர்ந்து முன்னேறி ஒரு பாதுகாப்பு அதிகாரியை குத்த முயன்றார், எனவே சுதாரித்த அதிகாரி அவருடைய காலில் சுட்டார்
தொடர்ந்தது குண்டடிபட்ட குற்றம் சாட்டப்பட்ட நபரை அல்-அதான் மருத்துவமனைக்கு மாற்றி, அவர் மீது பல பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை அடிபடையில் குறிப்பாக இரண்டு கொலை முயற்சிகள், ஒன்று ஆசிய வெளிநாட்டவரை குத்தியது,மற்றொன்று போக்குவரத்து அதிகாரியை குத்த முயன்றது, பொது சொத்துக்களை சேதப்படுத்த முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்தியருக்கு வயிற்றில் குத்தப்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டது அதை நிறுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது மற்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.