(புகைப்படத்தில் ஜார்ஜ் ஜேக்கப் கடந்த குலுக்கலில் வெற்றி பெற்றவர்)
அபுதாபியில் இன்று(03/01/21) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிக் டிக்கெட் டிராவில் இந்தியர் முதல் பரிசு பெற்றார். அவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த அப்துல் சலாம் அவர்களுக்கு 2 கோடி திர்ஹம் அதிர்ஷ்ட பரிசு கிடைத்துள்ளது. பிக் டிக்கெட் தேர்வு நடுவர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக நடைபெற்ற பிக் டிராவில் முதல் பரிசு வென்ற கேரளா கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப், இந்த டிராவின வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தார். மேலும் டிசம்பர் 29, 2020 அன்று, ஆன்லைனில் எடுக்கப்பட்ட டிக்கெட் எண் 323601 க்கு அப்துல் சலாம் அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
முதல் பரிசை தவிர இந்தியகள் பி.எம்.டபிள்யூ சீரிஸ்-15 டிராவிலும்,இந்திய பெண் தினா டெய்ஸி டிசில்வா டிக்கெட் எண் 018416 இல் சொகுசு காரை பரிசாக பெற்றார். முதல் பரிசைத் தவிர, இன்றைய பிக் டிக்கெட் டிராவில் இந்தியர்கள் மற்ற மூன்று பரிசுகளை வென்றனர். இந்திய நாட்டவரான சஞ்சு தாமஸ் 193235 டிக்கெட் எண் மூலம் 30 லட்சம் திர்ஹாம் (சுமார் 6 கோடி இந்திய ரூபாய்) பரிசு வென்றார், இவர் ஆன்லைனில் டிக்கெட் வாங்கினார். ஆறாவது பரிசு 60,000 திர்ஹாம் மற்றும் ஏழாவது பரிசு 40,000 திர்ஹாம் பரிசுகளை இந்தியர்கள் வென்றனர். டிக்கெட் எண் 365569 க்கு வினீதா மெக்குன்னே ஆறாவது பரிசை வென்றார். செலின் சாக்கோ 466285 என்ற டிக்கெட் எண்ணில் ஏழாவது பரிசை வென்றார்.
இந்தியர்களைத் தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த இஜாஸ் ரஃபி கியானி டிக்கெட் எண் 417105 க்கு மூன்றாம் பரிசாக 10 மில்லியன் திர்ஹமும், பங்களாதேஷைச் சேர்ந்த சதாத் உசேன் டிக்கெட் எண் 565762 யில் நான்காவது பரிசான ஒரு லட்சம் திர்ஹமும் வென்றார். பிக் டிக்கெட்டுக்கான அடுத்த குலுக்கல் பிப்ரவரி 3, 2021 அன்று நடைபெறும்.
Indian Wins | DH20 Millions