மரணமடைந்த ஜார்ஜ்[வயது-30]
குவைத்தில் இந்திய, தமிழகம்,வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் பெயர் ஜார்ஜ் எனவும்,வயது-30 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள Chest Diseases மருத்துவமனையில்,எக்ஸ்ரே தொழில்நுட்பம் ஊழியராக சேவை செய்து வந்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கடந்த ஜனவரி-15 அன்று திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் ஜார்ஜ் மரணமடைந்தார் என்றும், பெற்றோர் தாயகத்தில் வசித்து வருகின்றனர், ஜார்ஜ்க்கு இன்னும் திருமண ஆகவில்லை. இவருடைய உடலை தாயகம் அனுப்புவதற்கான சட்ட நடவடிக்கைகளை குவைத்தில் உள்ள நண்பர்கள் சேர்ந்து முடித்தநிலையில், இன்று(17/01/21) ஞாயற்றுக்கிழமை மாலையில் குவைத் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் உடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து ஜார்ஜ் அவர்கள் உடல் அவருடைய சொந்த ஊரான வேலூர் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
வளைகுடா பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருந்து புதிதாக வேலைக்காக வரும் நம்மைப்போன்ற எந்தவொரு நபருக்கு இங்குள்ள காலநிலை ஒத்து போவதில்லை. எனவே நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம்தான் செய்ய வேண்டும். ஏ.சி-யில் அதிக நேரம் இருப்பதை முதலில் தவிர்க்க கற்றுக் கொள்ளுங்கள் அதுவே நம்முடைய முதல் எதிரி. வெப்பமான காலநிலையில் நம்முடைய உடலை வைத்திருப்பதே, நமது உடல் ஆரோக்கியமாக இருக்க முக்கியமான வழிகளில் ஒன்று. பிறகுதான் உணவு கட்டுப்பாடுகள்.... உடற்பயிற்சி எல்லாம்.....