குவைத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவித்த 16 இந்திய மாலுமிகளின் வழக்கு தீர்க்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம், குவைத்தின் தகவல் தொடர்புத் துறை துணைச் செயலாளர் கொலீத் அல் ஷிஹாப், இந்திய தூதர் சிபி ஜார்ஜை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தார்.
குவைத்திற்கு ULA Vessel என்ற இந்த கப்பல் 9 மாதங்களுக்கு முன்பு சரக்குகளுடன் வந்தது. இதையடுத்து கப்பலின் உரிமையாளருக்கும் அதில் உள்ள சரக்குகளின் உரிமையாளருக்கும் இடையிலான சட்ட மோதலைத் தொடர்ந்து குறைந்தது அந்த கப்பலில் உள்ள 16 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். இந்த சரக்கு கப்பல் குவைத்தின் Shuwaikh துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சிக்கியுள்ள இந்த இந்திய மாலுமிகள் பிரச்சினை தீர்க்கப்படாத தொடர்ந்து கப்பலின் ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து குவைத் மனித உரிமைகள் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டது.
தொடர்ந்து கடந்த வாரம் இந்த பிரச்சினை தொடர்பாக இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்களும் இநவிஷயத்தில் தலையிட்டார், இதையடுத்து இந்த பிரச்சினையில் விரைவில் தீர்வு ஏற்பட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kuwait Indians | Sailors Stuck | ULA Vessel