குவைத்தில் மணிக்கு 12 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும், குறைந்தது 300 பேர் தினசரி தங்கள் விசாக்களை ரத்து செல்கிறார்கள்;இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது
குவைத்தில் மணிக்கு 12 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும், குறைந்தது 300 பேர் தினசரி தங்கள் விசாக்களை ரத்து செல்கிறார்கள்
குவைத்தில் இருந்து பல்வேறுபட்ட காரணங்களால் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்பும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 300 பேர் ஒவ்வொரு நாளும் தங்கள் பணி அனுமதி பத்திரங்களை ரத்து செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திலும் 12 வெளிநாட்டவர்கள் குவைத்தை வி்ட்டு வெளியேறுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த மாதம் ஜனவரி 12 முதல் 24 வரையிலான 13 நாட்களில் 3,527 பேர் தங்கள் பணி அனுமதி பத்திரங்களை ரத்து செய்துள்ளதாகவும்,இதில் 1859 வெளிநாட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலையில் இருந்தவர்கள் என்பதால் அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது(வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்கள்) எனவும், மேலும் பல்வேறுபட்ட மரணங்கள் காரணமாக 230 வெளிநாட்டினரின் அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த காலகட்டத்தில் 39913 வேலைவாய்ப்பு அனுமதி பத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டது என்றும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குவைத்தில் இருந்து தாயகம் சென்று திரும்ப முடியாத 1538 நபர்களின் விசா காலாவதியான நிலையில் அவை ரத்து செய்யப்பட்டது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட துறையினை மேற்கோள்காட்டி குவைத்தின் பிரபல தினசரி அரபு நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.