குவைத்தில் அதிகாரிகள் மாறுவேடத்தில் சோதனைகளை துவங்கியுள்ளது; சட்டவிரோதமாக தங்கியுள்ள பலர் கைது செய்யப்பட்டனர்
குவைத்தில் அதிகாரிகள் மாறுவேடத்தில் சோதனைகளை துவங்கியுள்ளது
குவைத்தில் சட்டவிரோதமாக இருப்பவர்களைக் கண்டுபிடிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சாதாரணமான மக்களின் போர்வையில் போது இடங்கள் முதல் குடியிருப்புகள் வரையில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை தேடி வருகின்றன. கடந்த சில நாட்களில் இதேபோன்ற ஆய்வுகள் Farawaniya, Jaleeb உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டன, இதில் 46 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தால் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட பகுதிநேர பொது மன்னிப்பை பயன்படுத்திய நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நாட்டின் 180,000 வரையிலான வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியுள்ள நிலையில் வெறும் 5,000-ற்கும் குறைவானவர்கள் மட்டுமே பொது மன்னிப்பால் இதுவரையில் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று,அத்தகைய நபர்களுக்கு மார்ச்-2,2021 வரை தங்களின் வேலை அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க,மேலும் கால அவகாசம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது நடைபெற்று வருகின்ற தனிப்பட்ட பரிசோதனைகள்,விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தவுடன் நாடு தழுவிய சோதனையாக மாற்றப்பட்டு குற்றவாளிகளை நாடு கடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.