BREAKING NEWS
latest

Saturday, January 2, 2021

குவைத் விமான நிலையம் இன்றும் அதிகாலை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் இன்று(02/01/20) சனிக்கிழமை அதிகாலை முதல் திறக்கப்பட்டது. இரண்டாம் கட்ட வீரியமிக்க கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளுக்காக 10 நாட்கள் நீண்ட அடைப்புக்கு பிறகு இன்று அதிகாலை முதல் மீண்டும் சேவைகளை துவங்கியுள்ளது.

இன்று முதல்நாள் மொத்தம் 67 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் 30 விமானங்கள் நாட்டிற்கு வருகிறது, 37 விமானங்கள் நாட்டிற்கு வெளியே செல்கிறது. இன்று காலையில் முதல் விமானம் துருக்கிய ஏர்லைன்ஸில் இஸ்தான்புல்லிலிருந்து சுமார் 150 குடிமக்களைக் கொண்டு குவைத் விமான நிலையம் வந்தடைந்தது. 10 நாட்கள் விமான நிலையம் மூடப்பட்டதால் தவித்த பின்னர் தாயகத்திற்கு திரும்பியபோது குடிமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் குவைத்தில் இருந்து முதல் விமானம் தோஹாவுக்கு சுமார் 110 பயணிகளுடன் புறப்பட்டது, இரண்டாவது விமானம் 120 பயணிகளுடன் துருக்கிக்கு புறப்பட்டது என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இதுபோல் துருக்கி மற்றும் கத்தார் புறப்படும் இரண்டு விமானங்களில் செல்லும் பயணிகளின் நடைமுறைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது எனவும், இஸ்தான்புல்லிலிருந்து ஒரு விமானம் வந்துக்கொண்டு இருக்கிறது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக  உள்ளூர் பத்திரிக்கை சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில் இந்தியா உள்ளிட்ட நேரடியாக நுழைய தடைசெய்யப்பட்ட 35 நாடுகளின் பட்டியல் மாறாமல் உள்ளது.



Add your comments to குவைத் விமான நிலையம் இன்றும் அதிகாலை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »