BREAKING NEWS
latest

Sunday, January 24, 2021

குவைத்தின் 38-வது பிரதமராக ஷேக் சபா அல்-காலித் அவர்களை மன்னர் நியமனம் செய்தார்

குவைத்தின் 38-வது பிரதமராக ஷேக் சபா அல்-காலித் அவர்களை மன்னர் நியமனம் செய்தார்;தொடர்ந்து புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் அமீர் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்

குவைத்தின் 38-வது பிரதமராக ஷேக் சபா அல்-காலித் அவர்களை மன்னர் நியமனம் செய்தார்

குவைத்தின் 38-வது பிரதமராக ஷேக் சபா அல்-காலித் அல்-சபா அவர்களை, மன்னர்(அமீர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல் சபா அவர்கள் இன்று மீண்டும் நியமித்து உத்தரவை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் அமீர் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சர்களை உள்ளடக்கிய 65 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில், பிரதமருக்கு எதிராக குற்ற விசாரணை நடத்த 38 உறுப்பினர்கள் ஆதரவுடன் கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகரிடம் வழங்கினர். இதையடுத்து சபாநாயகர் ஒப்புதல் அறிவிப்பைத் தொடர்ந்து 29-நாள்கள் மட்டும் ஆயுள்காலம் இருந்த புதிய அமைச்சரவை இந்த மாதம் 13-ஆம் தேதி தங்களுடைய ராஜினாமாவை அமீருக்கு சமர்ப்பித்தது.

அமீர் அவர்களின் சகோதரியின் மகனான ஷேக் சபா அல்-காலித் நவம்பர் 19, 2019 அன்று, முதல் முறையாக குவைத் பிரதமராக நியமிக்கப்பட்டார். அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஜாபர் அல் முபாரக் அல் சபா அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து இவர் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த டிசம்பர்-5 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வரை பிரதமராக பணியாற்றிய ஷேக் சபா அல் காலித் ஊழலை ஒழிப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு பதவி வகித்து வந்தார். இந்த காலகட்டத்தில் அரச குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை சந்தித்தனர்.

கடந்த டிசம்பர்- 5,2020 தேர்தலைத் தொடர்ந்து, அமீர் அவரை மீண்டும் பிரதமராக நியமித்தார். எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை உள்ள பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக குற்ற விசாரணைக் கடிதத்தை வழங்கினர். இதைத் தொடர்ந்து,கடந்த ஜனவரி 13-ஆம் தேதி அமை‌ச்சரவையின் ராஜினாமாவை பிரதமர் சமர்ப்பித்தார். நீண்டகால வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்து அனுபவமிக்க 66-வயதான ஷேக் சபா அவர்கள், இது மூன்றாவது முறையாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Add your comments to குவைத்தின் 38-வது பிரதமராக ஷேக் சபா அல்-காலித் அவர்களை மன்னர் நியமனம் செய்தார்

« PREV
NEXT »