குவைத்தின் அரசாங்க நிதியை மோசடி செய்த வழக்கில் கைதாகி விசாரணைகள் முடிந்த நிலையில்,குற்றவாளிகளான ஐரோப்பிய நாட்டவர்கள் நான்கு பேருக்கு கவுன்சிலர் அப்துல்லா அல்-ஒசைமி தலைமையிலான குவைத் குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அவர்கள் 11 மில்லியனை பணத்தை துஷ்பிரயோகம் செய்தனர் என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மோசடி நிரூபணமான நிலையில் நீதியன்றம் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், இரட்டை அபராதம் விதித்தது. அதாவது அவர்கள் திருடிய பணத்தின் இரண்டு மடங்குகள் அபராதம் செலுத்த வேண்டும்.
குவைத் அரசின் சார்பில் லண்டனில் இயங்கும் சுகாதார மையத்தில் நீண்ட காலமாக ஊழல் நடந்து வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அதே நேரத்தில், இவ்வளவு பெரிய மோசடியை வெளிக் கொண்டுவர பொதுநல வழக்கு தொடரப்பட்ட முயற்சிகளை நீதிமன்றம் பாராட்டியது.