குவைத்தில் தீ விபத்தில் சிக்கிய இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவர் உயிரிழந்ததார் எனவும் மற்றொரு பெண்மணி படுகாயமடைந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியை குவைத் தினசரி நாளிதழ் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
மங்காப்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதாக காவலரால் அறிக்கை கிடைத்தது, உடனடியாக பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அணைத்து உள்ளே சென்று சிக்கியிருந்த இரண்டு பெண்களை படுகாயமடைத்துடன் மீட்டர்.
தொடர்ந்நு இரண்டு பெண்களுக்கும் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றொரு பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை துவங்கியுள்ளர்