BREAKING NEWS
latest

Saturday, January 9, 2021

குவைத்தில் அரசு வேலைகளில் வெளிநாட்டினரை நீக்கி; குடிமக்கள் அமர்த்த முடிவு


குவைத்தில் அரசுத்துறைகளில் கணினிப்பிரிவில் வேலையில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களையும் இந்த ஆண்டு மாற்றி குவைத் குடிமக்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் புதிய நிதியாண்டு துவங்குவதற்கு முன்னர் வேலைவாய்ப்பு மாற்றுக் கொள்கைக்கு ஏற்ப தங்கள் நிறுவனங்களில் கணினித் துறைகளில் முழுமையாக “குவைத்திகளை” வேலைக்கு அமர்த்த சிவில் சர்வீஸ் கமிஷன் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று அல் அன்பா செய்தித்தாள் சம்பந்தப்பட்ட அரசு ஆதாரங்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பல அரசு நிறுவனங்களில் மாற்றப்பட வேண்டிய குவைத் அல்லாத ஊழியர்களின் எண்ணிக்கையை ஆணையம் குறிப்பிட்டுள்ளதுடன், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப வேலைகளைச் செய்யும் வெளிநாட்டினரின் சேவைகளை நிறுத்துமாறு கமிஷன் கோரியுள்ளது. குவைத்தின் மொத்தமாக உள்ள 4.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் தொழிலாளர்கள் வெளிநாட்டினராக உள்ளனர். இதற்கிடைய,குவைத் குடிமக்களுக்கு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளித்து, வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை மட்டுப்படுத்தும் திட்டங்களை குவைத்தில் உள்ள பல அரசு நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளன.

சமீபத்திய மாதங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளைக் குறைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வைத் தீர்க்க வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்துமாறு குவைத்தில் உள்ள பல துறைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Add your comments to குவைத்தில் அரசு வேலைகளில் வெளிநாட்டினரை நீக்கி; குடிமக்கள் அமர்த்த முடிவு

« PREV
NEXT »