BREAKING NEWS
latest

Tuesday, January 19, 2021

குவைத்தில் மரபணு மாற்ற கோவிட் கண்டறியப்பட்ட நிலையில் சுகாதரத்துறை செய்தித் தொடர்பாளர் சந்திப்பு விபரங்கள்


குவைத்தில் மரபணு மாற்றப்பட்ட கோவிட் வைரஸ் இன்று(19/01/21) செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு மீண்டும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கியது.இங்கிலாந்தில் இருந்து நாட்டிற்கு வந்த இரண்டு குவைத் பெண்களுக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இங்கிலாந்திலிருந்து நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, அவர்களுக்கு எதிர்மறையான பி.சி.ஆர் சோதனை முடிவுகள் கண்டறியப்பட்ட நிலையில்,குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்களின் சோதனை முடிவுகள் நேர்மறையானவை(Positive) என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து நிபுணர் குழுவின் பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் ஒரு சிறப்பு கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

உலகெங்கிலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மரபணு மாற்ற கோவிட்-20 வைரஸ் குவைத்தில் கண்டறியப்பட்ட நிலையில் இந்த புதிய பிரச்சினையை சுகாதார அமைச்சகம் மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது. எனவே வைரஸ் பரவுவதைத் தடுக்க வரும் நாட்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் ஒவ்வொரு பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை கடுமையாக்க முடிவு செய்துள்ளது இதில் முக்கியமாக கருதப்படுகிறது. நாட்டில் சுகாதார முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுநடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்கவது மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்திற்கும்  கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை சுகாதார அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இருப்பினும், விமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் எல்லை  மூடப்படும் மற்றும் ஊரடங்கு மீண்டும் ஏற்படுத்துவது உள்ளிடவை தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை.

குவைத் கொரோனா மறுஆய்வுக் குழுவின் தலைமையில் நாட்டின் சுகாதார நிலைமையை தினசரி அடிப்படையில் மதிப்பீடு செய்து உன்னிப்பாகக் கண்காணிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கோவிட் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைப் பொறுத்து, நாட்டில் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

Add your comments to குவைத்தில் மரபணு மாற்ற கோவிட் கண்டறியப்பட்ட நிலையில் சுகாதரத்துறை செய்தித் தொடர்பாளர் சந்திப்பு விபரங்கள்

« PREV
NEXT »