குவைத் இந்திய தூதரகத்தில் 72-வது குடியரசு தின நிகழ்ச்சி, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றியே கொண்டாடப்படும்; நிகழ்ச்சிகள் Virtual அடிப்படையில் நடத்தபடும்
குவைத் இந்திய தூதரகத்தில் 72-வது குடியரசு தின நிகழ்ச்சி, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றியே கொண்டாடப்படும்
குவைத் இந்திய தூதரகத்தில் வைத்து நாளை(26/01/21) செவ்வாய்கிழமை, 72-வது குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றியே நடத்தப்படும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பிற கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை Virtual அடிப்படையில் நடத்தபடும். சரியாக காலை 09:00 மணிக்கு தேதிய கொடி ஏற்றப்படும், இதுபோல் மாலை 06:00 மணிக்கு தூதரகத்தில் வைத்து இசை நிகழ்ச்சி நடைபெறும்.
ஆனால் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றி தூதரகத்தின் உள்ளே மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி இல்லை. அதற்கு பதிலாக நாளைய நிகழ்வுகளை இந்தியர்கள் நேரடியாக கண்டுகளிக்க இணையவழி Zoom வசதியை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான Facebook மற்றும் YouTube வழியாக நிகழ்சிகள் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படும் எனவும், இந்தியர்கள் நேரடியாக நிகழ்ச்சிகளை காண முடியும் என்று செய்திக்குறிப்பில் தூதரகம் விளக்கமளித்துள்ளது.