குவைத் இந்திய தூதரகம் சார்பில் 196 பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்பட்டது;பாஸ்போர்ட்டை இந்தியர்கள் உடனடியாக புதுப்பிக்க முடியும்
குவைத் இந்திய தூதரகம் சார்பில் 196 பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்பட்டது
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் கடந்த டிசம்பர் மாதம் 196 இந்தியர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தகல்களை அதிகாரிகள் இந்தியர்களுடன் நடைபெற்ற Open House சந்திப்பில் தெளிவுபடுத்தினர், மேலும் 4467 சான்றளிப்பு பதிவுகள் இந்த காலகட்டத்தில் செய்யப்பட்டது. தூதரகத்திற்கு இந்த ஒரு மாதத்தில் 350 வேலைவாய்ப்பு தொடர்பான புகார்கள் வந்தன, இதுபோல் தூதரகத்தின் பிற ஆன்லைன் தளங்கள் மூலம் 323 புகார்கள் வந்ததாகவும் இவற்றில் 211 புகார்கள் தீர்க்கப்பட்டன, 33 புகார்களில் Sponsore கையில் இருந்து பாஸ்போர்ட் திருப்பி பெறப்பட்டது. அதே நேரத்தில இந்த டிசம்பரில் 14,852 இந்தியர்கள் வந்தே பாரத் மற்றும் பிற விமானங்களில் தாயகம் திரும்பினர்.
மேலும் பொலிஸ் சரிபார்ப்புக்கு முன்னர்(Police Verification) பாஸ்போர்ட் வழங்கப்படுவதால் தற்போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பாஸ்போர்ட்டை உடனடியாக புதுப்பிக்க முடியும். போலீஸ் சரிபார்ப்பு நடவடிக்கைகள் பின்னர் நடத்தப்படும். அதே நேரத்தில், இகாமா காலம் முடிவதற்குள் பாஸ்போர்ட்டை காலவதியாகும் வரையில் காத்திருக்காமல் புதிய பாஸ்போட் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தூதர் சி.பி. ஜார்ஜ் கேட்டுக்கொண்டார். டிசம்பரில் குவைத்தில் 91 இந்தியர்கள் உயிரிழந்தனர் மற்றும் 30 இந்தியர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறுபட்ட தேவைக்காக தூதரகத்திற்கு வருகை தந்திருந்த 1915 இந்தியர்களுக்கும் இலவசமாக மதிய உணவை வழங்கியது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.