குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(08/01/21) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பகல் நேரத்தில் வானிலை மிதமானதாகவும், ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும், வடமேற்கில் இருந்து ஏற்ற இறக்கமான காற்று மணிக்கு 06-26 கிமீ வேகமாகவும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இரவைப் பொறுத்தவரை,வடமேற்கு திசையில் இருந்து மிதமான காற்றுடன் குளிர்ச்சியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த காற்று மிதமான வேகத்தில் மணிக்கு 08-26 கிமீ / வரையில் வீசும்,சில பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு, சில மேக மூட்டங்களும் சிதறலாக அங்கங்கே தெரியும்.
நாட்டில் இன்று பகல் நேரத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை 20 டிகிரி என்றும், இது இரவில் 06 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.