இந்தியாவின் மருத்துவ வல்லுநர்களுக்கு கௌரவமிக்க நேரமிது;நாட்டின் கொரோனா தடுப்பூசிக்கு குவைத் அனுமதி,முதல் Batch கொரோனா தடுப்பூசி சில நாட்களில் குவைத்தை வந்தடையும்
இந்தியாவின் மருத்துவ வல்லுநர்களுக்கு கௌரவமிக்க நேரமிது;நாட்டின் கொரோனா தடுப்பூசிக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது
குவைத் அரசு இந்தியாவின் தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த நேற்று(29/01/21) இரவு அனுமதி வழங்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா(Oxford Astra - Zeneca) என்ற இநத கோவிட் தடுப்பூசி பயன்படுத்த குவைத் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் சுகாதார, உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சின் உதவி செயலாளர் அப்துல்லா-அல்- பதர் அவர்கள் ஒரு செய்திக்குறிப்பு மூலமாக இதை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான முடிவை நாட்டின் கூட்டு தொழில்நுட்பக் குழுவுடன், பதிவுகள் மற்றும மருத்துவக் கட்டுப்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து எடுத்துள்ளன என்றார். இந்தியாவில் இருந்து முதல் Batch கொரோனா தடுப்பூசி சில நாட்களில் குவைத்தை வந்தடையும் என்றும்,தடுப்பூசியின் செயல்திறன், தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றிய தெளிவாக ஆய்வுகள் நடத்தப்பட்டு மதிப்பீடு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும்,தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து பயன்பாட்டிற்குப் பிறகு உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.