குவைத்தில் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய இந்தியர் வீடியோகிராஃபர் ஒபைத் மேலடி அவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடத்தி அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்
குவைத்தில் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய இந்தியருக்கு பிரிவு உபசரிப்பு விழா நடத்தி அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்
குவைத்தில் உள்துறை அமைச்சகத்தில் கடந்த 15 வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த வீடியோகிராஃபர் "ஒபைத் மேலடி" அவர்களுக்கு குவைத்தில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரிவு உபசரிப்பு விழா நடத்தி வழியனுப்பி வைத்தனர். அமைச்சக தலைமையகத்தில் நடைபெற்ற பிரிவு உபசரிப்பு விழாவில் உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் தவ்ஹீத் அல் காந்தரி ஒபைத் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்,விழாவில் மற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
ஒபைத் அவர்கள் கடந்த 2006 இல் வீடியோ கிராபராக உள்துறை அமைச்சகத்தில் சேர்ந்தார்.இந்த காலகட்டத்தில், குவைத் நாட்டின் வரலாற்றில் நடந்த பல முக்கியமான நிகழ்வுகளின் காட்சிகளை வெளி உலகம் தனது கேமரா கண்களால் அவர் அழகாக வெளிப்படுத்தினார். முன்னதாக குவைத் எண்ணெய் நிறுவனத்தில் வீடியோகிராஃபராக இருந்த அவர், 2003 இல் சிறந்த காட்சிப் பதிவுக்கான விருதை வென்றார்.இந்திய,கேரளா மாநிலம்,கோழிக்கோடு மாவட்டம், பயோலியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த மூன்றரை சகாப்தங்களாக குவைத்தில் வெளிநாட்டு வாழ்கை வாழ்ந்து வருகிறார். இவருக்கு அமிதா உபைத் என்ற மனைவி ஷெல்லி, ஷெஸ்பி, ஷெப்பி, மற்றும் ஷாஹீன் என்ற 4 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்து.
Indian Ubaid | Kuwait Moi | Kuwait Videographer