குவைத்தில் 750 தினார்களுக்கு மேல் சம்பளம் உள்ள அரசு வேலைகளில் வெளிநாட்டினர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க நாடாளுமன்றத்தில் ஹிஷாம்-அல்-சாலிக் எம்.பி மசோதா தாக்கல்
Image: Kuwait Parliament
குவைத்தில் 750 தினார்களுக்கு மேல் சம்பளம் உள்ள அரசு வேலைகளில் வெளிநாட்டினர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மசோதா தாக்கல்
குவைத்தில் 750 க்கும் தினார்களுக்கு மேல் சம்பாதிக்கும் பொதுத்துறை(அரசு) நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடு விதிக்கக் கோரி ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் ஹிஷாம்-அல்-சாலிக் எம்.பி அறிமுகம் செய்து விவாதித்தார். பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகளை தேசியமயமாக்குவதற்காக சிவில் சர்வீஸ் சட்டம் 15/1976 இல் திருத்தம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு உத்தரவு தேவைப்படும் மேற்பார்வை( Supervisor) வேலைகள் தவிர பணியாளர்களை நியமித்தல், மறுசீரமைத்தல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்டவை நிர்வாகக் குழுவின் முடிவின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென இந்த மசோதா கோருகிறது.
வெளிநாட்டினரை வேலைக்கு நியமிப்பது தற்காலிக(Temporarily) அடிப்படையில் இருக்க வேண்டும். மேலும் குடிமக்கள் அல்லது பிற பிரிவுகளின் கீழ் வேலை செய்யும் நபர்கள் இதற்கு தகுதியானவர்களாக இல்லை என்றால் மட்டுமே வெளிநாட்டினருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மசோதா கோருகிறது. குவைத்தி அல்லாத நபர்களுடன் திருமணமான குவைத் பெண்களின் குழந்தைகள், தாய்நாடுகளை இழந்தவர்கள்,ஜி.சி.சி குடிமக்கள் பிறகு வெளிநாட்டினர் நியமனம் என்று வேலை வாய்ப்புக்கான முன்னுரிமை அடிப்படையிலான அட்டவணை இந்த மசோதாவில் வகுக்கப்பட்டுள்ளது.
முதன்மை பிரிவு (A Category) கீழ் 750-க்கும் மேற்பட்ட குவைத் தினார்கள் சம்பளத்துடன் நியமனம் செய்யபட்டு பணிபுரிந்தால்,அவர்களின் பெயர் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட வேண்டும். இதுபோல் E Category-யின் கீழ் பணியாளர்களைச் வேலைக்கு எடுப்பதற்கு முன், பிற பிரிவுகளின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் யாரும் வேலைக்கு கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் சிவில் சர்வீஸ் கமிஷனைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மசோதா கோருகிறது.