குவைத்தின் சூக்-முபராகியாவின் பகுதிகளிலுள்ள சுவர்களில் அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை வைப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இந்த புதிய உத்தரவை மீறுபவர்களுக்கு 100 முதல் 1,000 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட நபர்களின் குற்றத்தின் அடிப்படையில் இந்த அபராத தொகை நிர்ணயம் செய்யப்படும்.
முன்னதாக முபாரக் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் அம்தல் அல் அஹ்மத், சுகாதாரம் மற்றும் சாலைகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தார். அப்போது சூக்-முபராகியா பகுதிகளை பார்வையிட்ட நேரத்தில் அங்காங்கே சுவர்களில் பல அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை ஒட்டியுள்ளதை அம்தல் கவனித்தார். இதைத் தொடர்ந்து, உரிமம் இல்லாமல் இதுபோன்ற நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் அழகினை கெடுக்கும் விளம்பரங்களை ஓட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.