குவைத்துக்கு புதிதாக வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான கட்டணமாக 990 தினார்களை குவைத் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், மனிதவளத்திற்கான பொது ஆணையம் இணைந்து நிர்ணயித்துள்ளது. ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் மூலம் கொண்டுவரப்படும் வீட்டுத் தொழிலாளர்களுக்கான செலவு 990 தினார்கள் எனவும் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக Sponsore அழைத்துவர 390 தினார்கள் செலவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
மேலும் ஏஜென்சி அலுவலகங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் வீட்டுத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது முதலாளியின் வீட்டில் வேலை செய்ய வேண்டும், இல்லையென்றால், ஆட்சேர்ப்பு அலுவலகம் வீட்டு உரிமையாளருக்கு இழப்பீடு மற்றும் வீட்டுப் பணியாளரை திருப்பி அனுப்புவதற்கான செலவை செலுத்த வேண்டும். கோவிட் சூழலில், ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து குடிமக்கள் தொடர்ந்து
பல புகார்கள் எழுந்தன. இந்த முடிவு குடிமக்கள் மீதான நிதிச்சுமையைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்றும், அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட கட்டணம் அதிகமாக இருந்தால் வர்த்தக அமைச்சின் நுகர்வோர் பாதுகாப்பு ஹாட்லைன் எண் 135 அல்லது domestic.workers@manpower.gov.kw மூலமாகவும் புகார் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பி.சி.ஆர் சோதனை, சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் செலவுகளை ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் ஏற்க வேண்டும் என்பதால்,இப்படி புதிதாக அழைத்துவரும் தொழிலாளர்களை அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொகைக்கு குடிமக்கள்(அரபிகள்) வாங்க முடியாது என்று ஆட்சேர்ப்பு முகவர் தெளிவுபடுத்தியுள்ளது. வீட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனவும், கோவிட் சூழ்நிலையில் வர்த்தக அமைச்சின் முடிவை ஏற்க முடியாது என்பது உள்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலக ஒன்றியத்தின் கருத்தாக உள்ளது.
Kuwait Recruitment | Domestic Workers | New Visa