குவைத் சிவில் ஏவியேஷன் துபாய், தோஹா, துருக்கி மற்றும் பஹ்ரைனில் இருந்து சிக்கித் தவிக்கும் மக்களைத் திரும்பி அழைத்துவர கூடுதல் விமானங்களை அனுமதிக்கிறது என்ற செய்தி வெளியிட்டுள்ளது.
சிக்கித் தவிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்(தொழிலாளர்களை) திரும்பி வருவதற்கு வசதியாக, துபாய், தோஹா, துருக்கி, பஹ்ரைன் மற்றும் வேறு சில தலைநகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம்,விமான நிறுவனங்களை அனுமதித்ததாக நம்பகமான ஆதாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை(02/01/21) சனிக்கிழமை,அதிகாலை 4 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வணிக விமானங்களின் இயக்கம் தொடங்கும் என்றும், விமான நிலையத்தின் செயல்பாடுகள் மூடப்பட்ட பிறகு நாளை முதல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதை இது குறிக்கிறது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் சிவில் ஏவியேஷன் விமானத்தின் சேவைகளை அதிகரிக்க செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக நாட்டிற்கு திரும்பும் விமானங்கள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் பெற முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்காலிக புகலிடங்களில் உள்ளவர்கள் குவைத்தில் நுழையும் பொது கடைபிடிக்க வேண்டிய சிவில் ஏவியேஷன் நேற்று வெளியிட்டுள்ள நிபந்தனைகளை இங்கே படிக்கவும் Link:https://www.arabtamildaily.com/2020/12/conditions-for-departure-arrival-passengers-at-kuwait.html