குவைத் தொழிலாளர் மற்றும் மனிதவள ஆணையத்தின் கூற்றுப்படி, தற்போது குவைத்திற்கு வெளியேயுள்ள, அதாவது விடுமுறை உள்ளிட்ட பல்வேறுபட்ட காரணங்களால் குவைத்தை விட்டு வெளியேறி, தங்கள் தாய்நாடுகளில் வசிக்கும் 33,414 தொழிலாளர்களின் பணி அனுமதி பத்திரம்(Visa) ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாட்டிற்கு வெளியே வாழும் வெளிநாட்டினர் எனவும், அவர்களின் பணி அனுமதி காலாவதியானது என்றும் மனிதவள மேம்பாட்டுக்கான மக்கள் தொடர்புத் துறையின் இயக்குனர் அசீல் அல் முஸ்யாத் கூறினார்.இதையடுத்து இதுவரை 91,854 பணி அனுமதி விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் ஓராண்டுக்கு முன்பு காலாவதியான நிறுவனங்களின் உரிமங்களும் கோப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர், அதன்படி இதுவரை 30,700 கோப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் 44,264 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குவைத் மனிதவள ஆணையத்தின் புதிதாக அறிமுகம் செய்யபடும் தானியங்கி அமைப்பில், நிறுவனங்கள் குறித்த சமீபத்திய தகவல்களை வழங்கத் தவறியதே இந்த ரத்துக்கு நடவடிக்கைகளுக்காக காரணம் என்று கூறப்படுகின்றன. மேலும் மனிதவள மேம்பாடுக்குழு தன்னியக்க(ஆன்லைன்) அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தியுள்ளது என்றும், பரிவர்த்தனைகளை விரைவாகவும் எளிதாகவும் முடிக்க அனைவரும் நிறுவனங்களின் சமீபத்திய தகவல்களைச் இதில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.