குவைத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பது தொடர்பான திட்டம் மேலும் ஒரு அறிவிப்பு வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் அறிவித்தார். அமைச்சரவை உத்தரவின்படி புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.சி.ஏ தெளிவுபடுத்தியது. பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கும், நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் தனிமைப்படுத்தலுக்காகவும் விமான நிறுவனங்கள் வழியாக வசூலிக்க எடுக்கப்பட்ட முடிவே இப்படி திடீரென அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 17 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்த கட்டணம் வசூலிக்கும் விதிமுறை ஒத்திவைக்கப்பட்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ஒழுங்குமுறை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை இது ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான சேவைகளை அதுவரையில் விமான நிலையத்தில் உள்ள குவைத் சுகாதரத்துறை அமைச்சகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது தெரிகிறது
kuwait Airport | PCR Fees | Testing moh