குவைத்தில் கடினமான சில நோய்களுக்கு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வலிநிவாரணி மாத்திரைகளை திருடி அதை சட்டவிரோதமாக பெண்களுக்கு போதைப்பொருளாக பயன்படுத்த வழங்கிய மருந்தாளரை குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அது தொடர்பான கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன அதன் விபரங்கள் பின்வருமாறு:
குவைத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அந்த நபர், பெண்களை தனது இன்பத்துக்காகவும், ஓய்வு நேரத்தை அனுபவிப்பதற்காகவும் தனது குடியிருப்பில் அழைத்து, பின்னர் மருத்துவமனையில் இருந்து திருடிய மருந்துகளை அவர்களுக்கு வழங்கி வந்துள்ளான். மருந்துகள் திருடுவதை யாரும் கண்டுபிடிக்கமால் இருக்கவும் மற்றும் உடன் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்கவும் அதே மருத்துவமனையில் உள்ள ஒரு டாக்டரின் மருந்து குறிப்புக்களை பயன்படுத்தி மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட மருந்தாளரின் சட்டவிரோதமான நடவடிக்கை அதிகாரிகள் உறுதிசெய்த நிலையில்,குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரியே மாறுவேடமிட்டு அவரைத் தொடர்புகொண்டு, அவருக்கு மருந்துகள் தேவை என்று சொல்லி அவருடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அவனது குடியிருப்பில் சென்றார். இதன்மூலம் குற்றவாளிக்கு எதிரான அனைத்து ஆடியோ அழைப்புகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். மேலும் அவருடைய குடியிருப்பில் புகுந்து அதிகாரிகள் நடத்திய அதிரடியாக சோதனையில் ஏராளமான போதைப்பொருட்களை வைத்திருந்ததாகவும் அவர் குற்றவாளி என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். மருந்தாளர் அரபு நாட்டவர் என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.